Loading …

அப்பா

நான் தலை நிமிர்ந்து
நடப்பதற்காக
என் அப்பா
தலை குனிந்து
மண்வெட்டியைப் பிடித்து
வேலைசெய்யும் போது
அவர் நெற்றிபொட்டில்
தேங்கிநின்ற
ஒரு சொட்டு
வியர்வை துளிக்கு
என்
வாழ்க்கை முழுவதும்
சமர்பணம்.

என் முகம் அறியாத தேவதைக்கு

இது
என் முகம் அறியாத
தேவதைக்குத்தான்…
என் முகத்தை தொலைத்ததே
அவளிடம் தான்…

மெதுவாக புரட்டுங்கள்

மெதுவாக புரட்டுங்கள்
என் செல்லம்
வரும் இடங்களில்
ஏதேனும்
அவளுக்கு வலிக்கப்போகிறது…

திருஷ்டி

உன் அழகுக்கெல்லாம்
திருஷ்டி கழிக்க எண்ணிய
இறைவன்
உன் கன்னத்தில்
மச்சைத்தை வைத்து
உன்னை மேலும்
அழகாக்கி விட்டான்.
அதனால் தான்
நான் கறுப்பாய் பிறந்து
உன் திருஷ்டியெல்லாம்
நான் ஏற்றுக்கொண்டேன்…

தேவதைகளின் தேவதை

உலகில் உள்ள
அனைத்து
தேவதைகளின்
புகைப்படத்தையும்
சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

அவர்களின்
நடுவில்
உன் புகைப்படத்தை
வைத்து உன்னை
தேவதைகளின் தேவதை
என்று காட்ட…

உன் மகரந்தப் பார்வை

உன் மகரந்தப்
பார்வைக்காகத்தான்
காத்திருக்கின்றன.
உலகெங்கும்
உன் நினைவுகளை
சுமந்திருக்கும்
என் காதல் பூக்கள்…

மந்திரப் புன்னகை

உன் மந்திரப் புன்னகையால்
என் நினைவுகளைக்
கட்டிவைத்து விட்டு
உன் நினைவுகளை மட்டும்
அவிழ்த்து விட்டுவிட்டாயே
என் இதயத்தில்…

தனியாக சிரிக்கிறேன்

நான்
அடிக்கடி
தனியாக சிரிக்கிறேன்
என்கிறார்கள்.
அவர்களுக்கு
எப்படித் தெரியும் ?
நான்
உன் நினைவுகளால்
வெட்கப்பட்டு கொண்டிருப்பது…

மயக்கம் தெளிந்த வண்ணத்துப்பூச்சி

உன்
உதட்டின் மீது
அமர்ந்த வண்ணத்துப்பூச்சிகள்
எல்லாம்
சிறிது நேரத்தில்
மயக்கம் போட்டு
விழுந்துவிட்டன..
மயக்கம் தெளிந்ததும்
ஏன் என்றேன்?
அளவுக்கு மீறிய
அமுதம் தான் என்றது…

உன் காலனிகளை கவனமின்றி

கோவில்களுக்கு
வெளியே உள்ள
உன் காலனிகளை
கவனமின்றி
அணிந்து விடாதே!!
அதற்குள் மற்ற
காலனிகளெலலாம்
உன் காலனியைத்
தள்ளி விட்டுவிட்டு
உன்
அழகிய பாதங்களைத்
திருடிக்கொள்ளும்…